உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிட்டோ ஜாக் மறியல்; 410 பேர் கைது

டிட்டோ ஜாக் மறியல்; 410 பேர் கைது

திண்டுக்கல்: தி.மு.க.., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோ ஜாக்) சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், ஜான் பீட்டர், பிரபாகரன், கோபிநாதன், ஆர்தர், கிருஷ்ணமூர்த்தி, ஜான்வில்சன், சண்முகம், ஆல்பர்ட்டென்னிஸ் தலைமை வகித்தனர். டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 410 கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !