உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுப்பு உயரம் குறைவான கழிப்பறை; முகம் சுளிக்கும் பயணிகள்

தடுப்பு உயரம் குறைவான கழிப்பறை; முகம் சுளிக்கும் பயணிகள்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பறைகளில் உள்ள தடுப்பு உயரம் குறைவாக இருப்பதால் பஸ்சில் இருப்பவர்களுக்கு சிறுநீர் கழிப்பது தெரிகிறது. இதனால் பெண் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது .ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ்ஸ்டாண்ட் வழியாக பல்வேறு நகர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. ஆன்மிகத் தலமான பழநிக்கும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இது போல் உடுமலை, பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தினமம் 600 க்கும் அதிகமான பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. முக்கிய பங்கு வகிக்கும் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு வசதி என்பது அறவே இல்லை.ஆண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பறைகள் தடுப்பு உயரம் குறைவாக இருப்பதால் பஸ்களில் உட்கார்ந்து இருக்கும் பயணிகளுக்கு சிறுநீர் கழிப்பது தெரிகிறது. பயணிகள் முகம் சுளிக்கின்றனர். கழிப்பறை தடுப்பின் உயரத்தை அதிகரித்து முழுமையாக மறைவு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். கூரை வசதியின்றி மழை, வெயில் காலங்களில் பஸ்கள் ஏறுவதற்கு வரும் பெண்கள், முதியோர்கள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை