கிரிவீதியில் பயன்பாட்டிற்கு வந்த கழிப்பறை
பழநி: பழநி கிரிவீதியில் கழிப்பறை இன்றி பக்தர்கள் அவதி என தினமலர் நாளிதழில் டிச. 20ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இங்கு கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பாத விநாயகர் கோயிலில் இருந்து ரோப் கார் வரை போதுமான கழிப்பறை வசதி இல்லை என செய்தி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக பழநி கோயில் தலைமை அலுவலகம் அருகில் உள்ள கட்டணமில்லா கழிப்பறையை பழுது நீக்கம் செய்த கோயில் நிர்வாகம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு திறந்துள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' பக்தர்கள் வசதிக்கென விரைவில் வடக்கு கிரிவிதி பகுதியில் நிரந்தர கழிப்பறை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.