உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓணம் பண்டிகைக்காக- நாள்தோறும் டன் கணக்கில் செல்லும் பூக்கள்

ஓணம் பண்டிகைக்காக- நாள்தோறும் டன் கணக்கில் செல்லும் பூக்கள்

திண்டுக்கல் : கேரளா வயநாடு நிலச்சரிவினால் கடந்தாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்தானதால் நஷ்டமடைந்த வியாபாரிகள், விவசாயிகள் இந்தாண்டு நல்ல விலைக்கு விற்பனையாவதால் மகிழ்ச்சியடைந்துள்ள இவர்கள் நாள்தோறும் டன் கணக்கில் பூக்களை அனுப்பி வருகின்றனர். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப்பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை காலங்களில் கேரளா வியாபாரிகள் திண்டுக்கல் மார்க்கெட்டிலிருந்து வாடாமல்லி, செண்டு மல்லி, அரளி, பட்ரோஸ், பன்னீர்ரோஸ், செவ்வந்தி, போன்ற பூக்கள் அதிக அளவில் வாங்கி செல்வர். 2024ல் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லாததால் பல டன் பூக்கள் தேக்கமாக விவசாயிகள், வியாபாரிகள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்நிலையில் இந்தாண்டு ஓணம் பண்டிகை கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் 10 முதல் 30 டன் வரை வாடாமல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் அனுப்பபடுகிறது. கடந்த முறையை விட இந்த முறை வாடாமல்லி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது .குறிப்பாக 2024ல் கிலோ வாடமல்லி ரூ.10 க்கு கூட வாங்க ஆள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ