உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேரூராட்சி கூட்டங்கள்

பேரூராட்சி கூட்டங்கள்

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா, துணைத் தலைவர் மலைச்சாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். மொட்டணம்பட்டியில் ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார். அய்யலுார் பேரூராட்சி கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். தங்கம்மாபட்டியில் ரூ.27.50 லட்சம், வேங்கனுாரில் ரூ.27 லட்சம், முடக்குபட்டியில் ரூ.31 லட்சம், மல்லமநாயக்கன்பட்டியில் ரூ.37 லட்சத்திலும் ரோடு பணி செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி