உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வர்த்தகர் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வர்த்தகர் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் முக்கிய சாலைகளில் நடைபாதையை ஆக்கரமித்து கடை அமைத்திருப்பவர்களை அகற்றவேண்டும் என திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர் சுந்தரராஜன் ,செயலாளர் லியோபிரதீப் மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில் ,திண்டுக்கல்லில் வணிக நிறுவனத்தினர், மாநகராட்சி சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் கட்டணம், குடிநீர்வரி, குப்பைவரி, பாதாளசாக்கடை கட்டணம், மின்கட்டணம், FSSAI கட்டணம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல வரிகளை அரசுக்கு செலுத்துகிறார்கள். பண்டிகை போது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ், இனாம் செலவுகள் எதிர்கொள்ள வேண்டும்.விரைவில் தீபாவளி வருவதால் 15 நாட்கள் வணிகத்தை வைத்தே அனைத்து செலவுகளையும் வணிகர்கள் சரிசெய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் பண்டிகைக்கு முன்னதாகவே முக்கிய சாலைகளில் நடைபாதை கடைகள் அமைப்பவர்கள் நிரந்தர கடைகளுக்கு செல்லும் வழியை மறித்து ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏறபட்டு உள்ளது. இதனால் நிரந்தர கடைகளின் வியாபாரம் பெரிதளவில் பாதிக்கிறது.தொழில் போட்டி, அனைத்து வகை வரி உயர்வுகளையும் வணிகர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் நிரந்தர கடை நடத்தும் வணிகர்களின் வியாபாரம் பாதிக்காத வகையில் ஆக்கிரமிப்பு இல்லாமல் நடைபாதை கடைகள் போடுவதற்கு மாநகராட்சி கமிஷனர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை கடைகள் போடும் சிறுவியாபாரிகளுக்கு மாநகராட்சிக்கு பின்புறம் உள்ள ஆர்.எஸ்.,ரோடு, சாலைரோடு பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ