உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

 வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் விற்பனைக்குழு உறுப்பினர்கள் தேர்வில் தன்னிச்சையாக செயல்பட்ட கமிஷனர் செந்தில்முருகனை கண்டித்து சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அரபு முகமது தலைமை வகித்தார். அப்போது அவர், தமிழக அரசு திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் குறிப்பிட்டு 10 வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 38 வார்டு களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார். 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி