பயிற்சிப் பட்டறை
திண்டுக்கல்: போக்சோ சட்ட வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்த பயிற்சி பட்டறை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன் வரவேற்றார். எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் கீதா, மன நோய் பிரிவு மருத்துவர் கார்த்திக், தடய அறிவியல் உதவி இயக்குநர் விஜயேந்திரன், சி.இ.ஓ., உஷா, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சரண், தலைமை குற்றவியல் நீதிபதி கனகராஜ் பேசினர். நன்னடத்தை அலுவலர் சுகிர்தாஜூலி நன்றி கூறினார்.