மேலும் செய்திகள்
கிரிவலப்பாதையில் பசுமை பற்றிப்படரும்
02-Jun-2025
திண்டுக்கல்: தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்) திண்டுக்கல் மண்டலத் தலைமை அலுவலகம், பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு தவிர்க்கும் முயற்சியாக மரக்கன்று நடும் விழா நடந்தது. மேலாண் இயக்குநர் இளங்கோவன் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார். ஒவ்வொருவரும் சுய பங்களிப்பாக ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க உறுதி எடுத்துக்கொண்டனர். புங்கை, வேம்பு, செம்பருத்தி, கடம்பம், செம்பருத்தி உள்பட பூச்செடிகள் என 207 மரக்கன்றுகள் நடப்பட்டன. பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டார்.
02-Jun-2025