த.வெ.க., ஆர்ப்பாட்டம்
செந்துறை: -நத்தம் செந்துறையில் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி த.வெ.க., தெற்கு மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் வீரராஜ் முன்னிலை வகித்தார். இதில் செந்துறை, சிரங்காட்டுபட்டி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஊராட்சிகளில் ரோடு, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனராஜ், சசிக்குமார், பனரோஸ், மூக்கையா, தெய்வேந்திரன், திருப்பதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.