மேலும் செய்திகள்
விபத்தில் காயம்
31-Oct-2024
வடமதுரை ; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஸ்டுடியோ முன் நிறுத்தியிருந்த கார், பழநியில் ரோட்டில் சென்ற கார் என இரு கார்கள் தீப்பற்றி எரிந்தது.வடமதுரை வெள்ளமடை பிரிவு பகுதியை சேர்ந்தவர் தவமணிகண்டன் 26. திண்டுக்கல் ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். தனது நண்பரான மோர்பட்டி விஜய் 28 ,என்பவரது காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு ஸ்டுடியோ பகுதியில் ரோட்டோரம் நிறுத்திவிட்டு கடையில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு கார் தீப்பற்றி முழுவதும் எரிந்தது. வேடசந்துார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இன்ஜின் கோளாறா, யாரேனும் தீவைத்தனரா என வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.பழநி: பழநி - -கொடைக்கானல் சாலை வனப்பகுதி நடுவே 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் செல்கிறது. பழநி வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இரவு பயணத்தின் போது சாலையில் விபத்து அபாயம் உள்ளது. நேற்று அதிகாலை சேலத்தை சேர்ந்த இருவர் கொடைக்கானல் நோக்கி காரில் சென்றனர். சவுரிக்காடு அருகே சென்ற போது காரில் தீ பற்றியது. இருவரும் தப்பினர். கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. அதில் பயணம் செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை .போலீசிலும் புகார் கொடுக்க வில்லை. கார் எண்ணை வைத்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2024