கிணற்றில் மூழ்கி இரு சிறுமியர் உயிரிழப்பு
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே, கிணற்றில் மூழ்கி இரு சிறுமியர் உயிரிழந்தனர். திண்டுக்கல், புதுப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒச்சம்மாள், 11, தமிழ்ச்செல்வி, 10, என இரு மகள்கள். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இருவரையும் காணவில்லை. வீட்டருகே உள்ள கிணற்றின் கரையில் அவர்களின் செருப்புகள் கிடந்தன. தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர தேடலுக்கு பின், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.