உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்ணுக்குள் புதைந்த இரு தொழிலாளர்கள்

மண்ணுக்குள் புதைந்த இரு தொழிலாளர்கள்

கொடைரோடு:திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனுார் பெருமாள் கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் மண் சரிந்ததில் காயம் அடைந்தனர். அம்மையநாயக்கனுார் கதலி நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபம் உட்பட புரதான சின்னங்கள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வந்தது. தற்போது தமிழக அரசு சார்பில் ரூ.1.80 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. செப்., 15 தெப்பக்குளத்தின் உள்பகுதியில் நடந்த கட்டுமான பணியின்போது வாகன அதிர்வால் பக்கவாட்டு மண் சரிந்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மஞ்சமலை 52, பழனி 44, ஆகிய இருவரும் மண்ணுக்குள் புதைந்தனர். மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் காயம் அடைந்த இருவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்