உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்கள் மோதல்: இருவர் பலி

டூவீலர்கள் மோதல்: இருவர் பலி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் பலியாகினர். சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஓட்டல் தொழிலாளி சதாம் உசேன் 37, முகமது ஹாரிஸ் 24. இருவரும் டூவீலரில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்துவிட்டு இன்று (நவ.,11) அதிகாலை 1:30 மணிக்கு ஊர் திரும்பினர். சம்பபட்டி பிரிவு பகுதியில் சென்றபோது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்- மறவமங்கலத்தைச் சேர்ந்த சைமன் ஜோசப் 46, ஓட்டி வந்த டூவீலருடன் இவர்களது டூவீலர் நேருக்குநேர் மோதியது. இவ்விபத்தில் சதாம் உசேன், சைமன் ஜோசப் சம்பவ இடத்திலேயே இறந்தனர். முகமது ஹாரிஸ் லேசான காயங்களுடன் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ