உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர்கள் ஆக்கிரமிப்பால் அவதி

டூவீலர்கள் ஆக்கிரமிப்பால் அவதி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் டூவீலர்கள், சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட்டில் வெளியூர் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. இவை நீண்ட நேரமாக அங்கேயே நிற்பதால் அவ்வழியாக செல்லும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. இதனால் வேகமாக சென்று பஸ்ஸை பிடிக்க முயலும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடந்து செல்லும் பயணிகள் தட்டுத் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. பண்டிகை, விசேஷ காலங்களில் பயணிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்கள், சிறுவியாபாரிகள் ஆக்கிரமிப்பை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை