உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இலவச 100 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியாமல் அவதி : மின்வாரியத்தினர் அலட்சியம்

 இலவச 100 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியாமல் அவதி : மின்வாரியத்தினர் அலட்சியம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் மின்வாரியத்தின் குளறுபடியால் இலவச 100 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். நிலக்கோட்டை நகர் , ஊரக பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு தனித்தனி மீட்டரில் மின்கட்டணம் செலுத்தும் வசதி இருந்தது. இலவச 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடு விதித்த நிலையில் தனித்தனி பயனாளிகளை நீக்குவது , மீட்டர் பொருத்தும் பணிகளை மின்வாரியம் செய்தது. ஏற்கனவே தனித்தனியாக இருந்த வாடகை வீடுகளின் மின் மீட்டர்களின் இருந்த வீடுகளில் உரிமையாளர் ஒரே நபராக இருந்தால் ஒரு வீட்டிற்கு மட்டும் இலவச மின்சாரம் பெறும் திட்டத்திற்கு கட்டணம் செலுத்துமாறு வகைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் செய்தால் பொதுமக்கள் வரவேற்பு அளித்திருப்பர். செல்வாக்கு மிக்கவர்களுக்கும், கவனிப்பவர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வாடகை வீட்டில் குடியிருக்கும் பயனாளி ஒருவர் கூறுகையில், ''தனித்தனியாக மீட்டர் இருந்த போது குறைவான மின்சாரம் செலவானது. ஒரு வீட்டிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் படியாக மின்வாரியத்தினர் மாற்றி விட்டதால் கட்டணமும் கூடுகிறது. இதன் மூலம் இலவச மின்சாரம் பொதுமக்கள் பெற முடியாதவாறு மின்வாரியத்தினர் தடுத்து வருகின்றனர் '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை