உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வில்பட்டி ரோட்டில் அகற்றாத இடிபாடுகள்

வில்பட்டி ரோட்டில் அகற்றாத இடிபாடுகள்

கொடைக்கானல் : கொடைக்கானல் அட்டுவம்பட்டி ரோட்டில் சரிவர அகற்றாத இடிபாடுகளால் விபத்து அபாயம் உள்ளது. இந்த ரோட்டில் வடகிழக்கு பருவ மழையின் போது சில வாரங்களுக்கு முன் கனமழையால் வில்பட்டி பிரிவில் மண் சரிவு, பாறைகள் உருண்டது.போக்குவரத்து பாதித்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இடிபாடுகளை முழுமையாக அகற்றாத நிலையில் சந்திப்பு பகுதியானஇந்த ரோட்டில் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலை,குறுகிய பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ரோட்டில் உள்ள தெரசா பல்கலை, அரசு கலை கல்லுாரி மாணவிகள்,ஏராளமானோர் செல்கின்றனர். அகற்றப்படாத இடிபாடுகளால் விபத்து அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை