உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடகாடில் சிறுத்தையால் பலியாகும் ஆடுகள் கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

வடகாடில் சிறுத்தையால் பலியாகும் ஆடுகள் கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மலை கிராம பகுதிகளில் சிறுத்தை கடித்து ஆடுகள் பலியாவது தொடர்வதால் கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வடகாடு கண்ணனுார் பகுதியை சேர்ந்த செல்வராஜ் தோட்டத்தில் கட்டி இருந்த மூன்று ஆடுகள் ஆகஸ்டில் சிறுத்தை தாக்கி பலியாகின. இதேபோல் கோட்டைவெளியை சேர்ந்த மகேந்திரன் வளர்த்து வந்த ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் இறந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதே பகுதி சுரைக்காய்பட்டியில் சிவச்சந்திரன் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்று சிறுத்தை தாக்கி பலியானது. தொடர்ச்சியாக சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் பட்டாசு வெடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் இதே நிலை தொடர்கிறது. வீடு, தோட்டங்களில் வளர்த்து வரும் நாய், கோழி, ஆடுகளை தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை