மேலும் செய்திகள்
பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
31-Dec-2025
வடமதுரை: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்த புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். காத்திருந்த பக்தர்கள் கோஷமிட்டு வணங்கினர். கருட வாகனத்தில் பெருமாள் காலை 7:00 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு ரத வீதிகள் வழியே பக்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் சன்னதி திரும்பினார். பழநி : மேற்குரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்க அதன் வழியே கருட வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருளினார். கோயில் யானை கஸ்துாரி மரியாதை செலுத்தியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது . பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்க அதன் வழியே ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சுவாமி எழுந்தருளினார்.
31-Dec-2025