உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இன்று, நாளை வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

 இன்று, நாளை வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

வேடசந்தூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலகங்களை நவீன மயமாக்குதல், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குதல், வி.ஏ.ஓ., பதவிக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக மாற்றியமைக்க கோருதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தென்மண்டல அளவிலான காத்திருப்புப் போராட்டம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இன்றும் (ஜன.,28) நாளையும் (ஜன.,29) நடைபெற உள்ளது. சங்க திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் கூறுகையில், ''தென்மண்டல அளவில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடக்க உள்ளது. தென்மண்டலம் சார்பில் ஜன.,30ல் சென்னை சென்று காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை