உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் விஜய் பிரசார தேதி மாற்றம்

திண்டுக்கல்லில் விஜய் பிரசார தேதி மாற்றம்

திண்டுக்கல்:தமிழகம் முழுவதும் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் டிச.,20ம் தேதி பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. நகரில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. மணிக்கூண்டு அருகே பிரசாரம் செய்ய போலீஸ் அனுமதி வேண்டி எஸ்.பி.,அலுவலகத்தில் செப்.,15ல் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரசாரம் செய்யும் தேதி டிச.,7 என மாற்றத்திற்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து த.வெ.க., மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமையில் கட்சியினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். டிச.,7ல் புதுக்கோட்டை, திண்டுக்கல் என இரண்டு மாவட்டங்களிலும் விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திண்டுக்கல் வரும் விஜய்க்கு பாதுகாப்பு மற்றும் பிரசாரத்திற்கான முன் அனுமதி வேண்டும் எனக்கேட்டு மனு அளிக்க வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !