விழுப்புரம், மயிலாடுதுறை ரயில்கள் நேர மாற்றம்
வடமதுரை: திண்டுக்கல்லிலிருந்து தற்போது அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி முதல் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படுகிறது.தற்போது வடமதுரையில் 5:12 மணிக்கு வரும் இந்த ரயில் இனி காலை 5:46 மணிக்கு வந்து புறப்படும்.இதன் மறுமார்க்க ரயில் வடமதுரைக்கு இரவு 9:24 மணிக்கு வந்து திண்டுக்கல் புறப்படும்.இதே போல செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா ரயில் அங்கிருந்து ஜனவரி முதல் செங்கோட்டையில் 10 நிமிடங்கள் முன்னதாக காலை 6:55 மணிக்கேபுறப்படுகிறது.இதனால் இந்த ரயிலின் திண்டுக்கல் புறப்படும் நேரமும் 10 நிமிடங்கள் முன்னதாக காலை 11:20 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த ரயில் இனி வடமதுரைக்கு காலை 11:34 மணிக்கு வந்து புறப்பட்டு செல்லும்.இதன் மறுமார்க்க ரயிலான மயிலாடுதுறை செங்கோட்டை முன்பதிவு உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் வடமதுரையில்இனி 3 நிமிடம் முன்னதாக மதியம் 3:24 மணிக்கே வந்து புறப்படும்.திண்டுக்கல்லில் இந்த ரயில் வழக்கம் போல மாலை 4:00 மணிக்கே செங்கோட்டைக்குபுறப்படும்.