உள்ளூர் செய்திகள்

வாலிபால் போட்டி

வத்தலக்குண்டு: மேலகோவில்பட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி நடந்தது. 32 அணிகள் பங்கேற்ற போட்டியில் முதல் அரை இறுதியில் மேலகோவில்பட்டி கிங்மேக்கர், வடுகபட்டி அணி மோதியதில் வடுகபட்டி வென்றது.இரண்டாவது அரை இறுதியில் மதுரை ஜான் மெமோரியல் அணியும் ஜெயமங்கலம் அணியும் விளையாடியதில் மதுரை அணி வென்றது.இறுதிப் போட்டியில் மதுரை அணி வென்று கோப்பை, ரூ.7000 பரிசு பெற்றது. வடுகபட்டி அணி 2ம் இடம் எடுத்து ரூ. 5000, கோப்பை வென்றது.3ம் இடத்தை ஜெயமங்கலம் அணியும் நான்காவது இடத்தை மேலக்கோயில்பட்டி வென்றன. பரிசினை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரகு, ஜான், பிரான்சிஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் கென்னடி, அந்தோணி விவேக் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி