உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பக்தர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் தன்னார்வலர்கள்

பக்தர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் தன்னார்வலர்கள்

பழநியில் பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்வது, பனை விதைகளை வழங்குவது என சேவையாற்றிவருகின்றனர் தன்னார்வலர்கள்.பக்குனி உத்திரம் திருவிழா நாட்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தர மரங்களின் விதைகளை நடவு செய்து கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர். இந்த மரக்கன்றுகளை ஒவ்வொரு பகுதிகளிலும் நடவு செய்து வருகின்றனர். பனை விதைகளையும் வழங்குகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குகிறது. மழைக்காலத்திற்கு முன்பு துாவப்படும் விதைப்பந்துகள் விரைவில் முளைத்து மரங்களாக வளர்கிறது. தற்போது விதைப்பந்துகளை தயாரித்து சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் விதைப்பந்துகளை வழங்குகின்றனர்.

பக்தர்களுக்கு விதைப்பந்துகள்

மஞ்சுளா, தன்னார்வலர், பழநி: தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அவர்களிடம் விதைப்பந்துகளை துாவ வழங்குகிறோம். பங்குனி உத்திரம் வர உள்ளதால் பக்தர்களுக்கு விதைப்பந்துகளை வழங்க தயாரிக்கிறோம்.

மரங்கள் வளர்ந்துள்ளது

பாலசுப்பிரமணியன், ஓய்வு போலீஸ் அதிகாரி, பழநி: விதைப்பந்துகளை தயாரித்து மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் துாவுகிறோம். அவற்றில் பல மரங்கள் முளைத்துள்ளன. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மரக்கன்றுகள் வழங்கினோம். லயன்ஸ் கிளப், ரயில் உபயோகிப்பாளர் சங்கங்கள் மூலமும் வழங்கினோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ