உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உஷார்: தேங்கும் நல்ல தண்ணீரில் கொசுப்புழுக்கள்

உஷார்: தேங்கும் நல்ல தண்ணீரில் கொசுப்புழுக்கள்

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்திய சாரல் மழையால் டெங்கு கொசுப்புழு உற்பத்தி பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. சுய மருத்துவத்தால் பக்கவிளைவுகளை தவிர்க்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் விழிப்புணர்வு தேவையாக உள்ளது.மாவட்டம் முழுவதும் தொற்று நோய் பரவலால் விதவிதமான வைரஸ்கள் அறிமுகமாகி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. கொசுத்தொல்லை அதிகரிப்பு, இவற்றின் பரவலுக்கு முக்கிய காரணியாகும். இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய் பரவலையும், பாதிப்புகளையும் வெகுவாக குறைக்க முடியும் என்பதை நோய் கண்காணிப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்ட மஸ்துார் பணியாளர்கள் நிரூபிக்கின்றனர். நிரந்தர பணியிடங்கள் ஏற்படுத்தாத சூழலில்,உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து இப்பணியாளர்களை கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப இப்பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளது. நோய் கண்காணிப்பு அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு ஆய்வு செய்வது இவற்றின் உற்பத்திக்கேற்ப தண்ணீர் தேங்காத சூழலை கண்காணித்தல் கொசுப்புழு ஒழிப்புக்கான அபேட குளோரினேஷன் தெளிப்பு, தண்ணீர் தேங்கும் காலன்களை அப்புறப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். திறந்த வெளியில் கிடைக்கும் சிரட்டை, பயன்பாடற்ற டயர்கள், தண்ணீர் தொட்டிகள், உரல், பிரிட்ஜ் பின்புறத்தில் உள்ள நீர் தேங்கும் பகுதி போன்ற அமைப்புகளில் தண்ணீர் தேங்குவதன் மூலம், இந்த வகை கொசு புழுக்களின் உற்பத்தி பல மடங்கு பெருகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதும், மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். கடைகளில் கிடைக்கும் மலிவு விலை மருந்து, மாத்திரைகள் மூலம் அவற்றை குணப்படுத்த முயற்சிக்கின்றனர். உடல் சார்ந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை