மேலும் செய்திகள்
பொங்கல் விழா கொண்டாட்டம்
14-Jan-2025
திண்டுக்கல் : உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் வனக் கோட்டத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி வினா, பேச்சுப் போட்டிகள் திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். எம்.வி.எம்., கல்லுாரி முதல்வர் நாகநந்தினி முன்னிலை வகித்தார்.6 முதல் 8, 9 முதல் 12, கல்லுாரி மாணவர்கள் என 3 நிலைகளில் நடந்த போட்டிகளில் 250க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் ஒவ்வொரு நிலையிலும் முதல் 3 இடங்களில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை வன அலுவலர் ராஜ்குமார் வழங்கினார். வன விரிவாக்க அலுவலர் வேல்மணி நிர்மலா, வனச் சரக அலுவலர்கள் மதிவாணன், குமார், வெனிஷ் பங்கேற்றனர்.
14-Jan-2025