பழனி கோவில் அறங்காவலர் குழு உள்ளூர் பிரமுகர் இல்லாதது ஏன்?
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஐந்து பேர் கொண்ட அறங்காவலர்கள் குழு சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டது. குழு தலைவராக திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். குழுவில் ஒருவர் கூட பழனியை சேர்ந்தவர் இல்லாததற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ் கூறியதாவது:தொழிலதிபர்கள், பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள், மகளிர், தி.மு.க.,வினர் என பலர் பழனியில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கும் அறங்காவலராக தகுதி இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆட்சியில் ஏற்கனவே மண்ணின் மைந்தர்கள், மண்டகபடிதாரர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் மரியாதையை, உரிமையை, உடமையை இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். எந்த அடிப்படையில் இந்த குழு நியமிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டனர். இதற்கு பதில் கேட்டும், பழனி மக்களை தொடர்ந்து புறக்கணித்து வரும் தி.மு.க., அரசையும், அறநிலையத் துறையையும் வன்மையாக கண்டித்தும் பா.ஜ., போராட்டத்தை முன்னெடுக்கும்.இவ்வாறு கூறினார்.