| ADDED : ஜன 21, 2025 06:24 AM
நத்தம்: -நத்தம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு மாடுகள் கூட்டம் அங்குள்ள விளை பயிர்களை சேதப்படுத்தின.-நத்தம் அருகே ஆவிச்சிபட்டி வலசல் பகுதியை சேர்ந்தவர் அடைக்கன் 55. இவருக்கு ஆவிச்சிபட்டி மலை அடிவார பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது.இதில் உளுந்து, தட்டப்பயறு, வெள்ளரி, நெல் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் தண்ணீர் தேடி வந்த 20-க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் விளைபயிர்களை சேதப்படுத்தின. இதில் தோட்டத்தில் இருந்த உளுந்து, தட்டப்பயறு செடிகள் முற்றிலும் சேதமடைந்தது.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும் காட்டுமாடுகள் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. பகல், இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுமாடுகள் விளைபயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தோட்டங்களில் தங்குவதற்கே பயமாக உள்ளது. இதற்கு வனத்துறை நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைப்பதோடு காட்டுமாடுகள் தண்ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலைகளை சுற்றி குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்' என்றார்.