உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையூர் பாதையில் காட்டுமாடுகள்

மலையூர் பாதையில் காட்டுமாடுகள்

நத்தம்: நத்தம் அருகே குட்டுப்பட்டி மலைப்பகுதியில் மலையூர், பள்ளத்துக்காடு,வலசை போன்ற கிராமங்கள் உள்ளன.இந்த மலை கிராம மக்கள் விவசாய பொருட்கள் வாங்கிச் சென்றால் குட்டுப்பட்டியில் இருந்து நடந்தே மலை கிராமத்திற்கு செல்வார்கள். மலையூருக்கு செல்லும் பாதையில் உள்ள கருப்புசுவாமி கோயில் பகுதியில் கரந்தமலை பகுதியில் இருந்து தண்ணீர் தேடி இறங்கிய 10-க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவ் வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித பயத்துடனே கடந்து செல்லும் சூழல் உள்ளது. இதை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி