உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டுமாடுகள்

கொடை யில் பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டுமாடுகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. காட்டுமாடுகள் அதிகளவில் பெருகியுள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் நகரை தேடி வருகின்றன. அவ்வப்போது காட்டுமாடுகளால் பயணிகள் ,உள்ளூர்வாசிகள் தாக்கப்பட்டு காயம் அடைகின்றனர். காட்டுமாடுகளை கண்காணிக்க வனத்துறை தனி குழு அமைத்தும் கட்டுப் படுத்த முடியவில்லை. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், மூஞ்சிக்கல், கோக்கர்ஸ்வாக் , குறிஞ்சியாண்டவர் கோயில், அரசு மருத்துவமனை, செவன் ரோடு, ஏரிச்சாலை, வில்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு மாடுகள் கன்றுகுட்டியுடன் நடமாடுகின்றன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நேற்று கங்கா காம்பவுண்ட் குடியிருப்பு பகுதியில் 10க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் முகாமிட்டதால் அச்சத்துடன் மக்கள் வீடுகளில் நடமாடினர். மேல் மலைப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை நடமாட்டம் என பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கும் நிலையில் நகர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ