மேலும் செய்திகள்
வடமதுரையில் பயணியர் நிழற்குடைகள்
31-May-2025
வடமதுரை:வேடசந்துாரில் இருந்து வடமதுரைக்கு மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் பஸ் சேவையின்றி மக்கள் பரிதவிக்கின்றனர்.வேடசந்துாரை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. தாலுகா அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றம் , கருவூலம், கிளை சிறை வளாகம், அரசு மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கல்லுாரி என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் வேடசந்துாரில் உள்ளன. வடமதுரை பகுதியில் இருந்து காலையில் புறப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்காக தற்போது காலை 7:30 மணிக்கு வடமதுரை வந்து திரும்பும் வகையில் கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் வேடசந்துாரில் இருந்து வடமதுரைக்கு மாலை 4:00 மணிக்கு பிறகு 5.30 மணிக்கு தான் அடுத்த பஸ் என்ற நிலை உள்ளது. இதனால் ஒன்றரை மணி நேரம் வடமதுரை செல்ல வழியின்றி பயணிகள் தவிக்கின்றனர். மாலை நேரத்தில் வேடசந்துாரில் வடமதுரைக்கு கூடுதலாக பஸ் சேவை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-May-2025