712 பேருக்கு பணி ஆணை
ஒட்டன்சத்திரம்: சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 712 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். ஆர்.டி.ஓ., கண்ணன், சுகாதார இணை இயக்குனர் உதயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் காசி முருக பிரபு, வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குனர் திருமலைச்செல்வி, மகளிர் திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் அருண் நேரு, வேலைவாய்ப்பு அலுவலர் ராப்சன் டேவிட், பாலிடெக்னிக் தலைவர் பிரதீப் டாம் சிரியன், பாலிடெக்னிக் முதல்வர் தினகரன் கலந்து கொண்டனர்.