உலக சுற்றுச்சூழல் தின விழா
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. மக்களின் எதிர்காலத்திற்கான காலநிலையை இயற்கையிடம் இருந்து பெறுதல் என்ற மையக்கருத்தை உள்ளடக்கி இவ்விழா நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இயற்கையின் அமைப்புகள், சமநிலை, பருவநிலை மாற்றத்தை தடுத்தல், வரும் சந்ததியினருக்கு பாதுகாப்பான, வளமான உலகத்தை உறுதி செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துக்களை இடைநிலை மாணவர்கள் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். பள்ளியில் மரக்கன்றுகள் நட்டனர். முதல்வர் சவும்யா முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.