மேலும் செய்திகள்
இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
17-Mar-2025
திண்டுக்கல்: கோவை ராணுவ வீர்கள் தேர்வு மையம் சார்பில் 'அக்னிவீர்' திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை மார்ச் 12 முதல் ஏப்.10 வரை ஆன்லைன் (joinindianarmy.nic.in) மூலம் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் பொது, தொழில்நுட்பம், கிளர்க், ஷாப்கீப்பர், டிரேட்ஸ்மேன்கள் (8வது மற்றும் 10வது தேர்ச்சி பெற்றோருக்கு) விண்ணப்பிக்கலாம். ஒருவர் இருபிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் 1.6 கி.மீ., ஓட்டச் சோதனை, 5.45 நிமிடங்கள் என்பது 6.15 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்.சி.சி., பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் உண்டு. நுழைவுத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும்.முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வும், பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
17-Mar-2025