மேலும் செய்திகள்
மூதாட்டி கழுத்தை அறுத்து நகை பறிக்க முயற்சி
03-Jun-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளி மாணவியை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன். இவரின் மகன் பேட்ரிக் சிலுவை முத்து 19. இவருக்கும் திண்டுக்கல்லில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமிக்கும் பணத்தகராறு இருந்துள்ளது.திண்டுக்கல்லில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு நேற்று மாலை வந்துள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டதையடுத்து மறைத்து வைத்திருந்த பிளேடால் சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.பேட்ரிக் சிலுவை முத்துவை போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
03-Jun-2025