உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர்கள்

ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் இளைஞர்கள்

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துார் ஹைகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திடலில் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். போட்டிகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் வருகின்றன. அதேபோல நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துாரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இளைஞர்கள் சிலர் இணைந்து 6 காளைகளை வளர்க்கின்றனர். இதற்கு தினமும் பயிற்சியும் அளிக்கின்றனர். காளை வளர்க்கும் அசோக் கூறியதாவது: காளை வளர்க்கும் ஆசை எங்களுக்கு மூத்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம். இதற்கென காளைகளை வாங்கி பழக்கி வருகிறோம். நீச்சல், மண்ணைக் குத்துதல், பாய்தல், துள்ளி குதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கிறோம். காளைகளுக்கு பேரிச்சம்பழம், பருத்தி விதை, தவிடு, தீவனங்கள் தேவையான அளவு வழங்குகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை