மேலும் செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுமா?
08-Jan-2025
இடைத்தேர்தலில் அ.தி.மு.க., நிர்வாகி போட்டி நடவடிக்கை பாயும் என மா.செ., கருத்துஈரோடு, :ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனால் தி.மு.க., நா.த.க., ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.இந்நிலையில், ஈரோடு அக்ரஹார வீதியை சேர்ந்த, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் செந்தில்முருகன், சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து, அவரது மனுவும் ஏற்கப்பட்டது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.இதுபற்றி அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்த செந்தில்முருகன், கடந்த, 2023ல் ஓ.பி.எஸ்., அணியில் இருந்து அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ்., அணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அடுத்த சில நாட்களில் இ.பி.எஸ்., முன்னிலையில் செந்தில்முருகன் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்து, ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.,-- எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளராக பொறுப்பை பெற்றார்.தற்போது இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த நிலையில், செந்தில்முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறி மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு கூறினர்.இதுபற்றி செந்தில்முருகன் கூறுகையில், ''ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பிரச்னைகள் எனக்கு அதிகமாக தெரியும். சுயேட்சையாக போட்டியிடுகிறேன். அதற்காக அ.தி.மு.க., என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் பிரச்னை இல்லை,'' என்றார்.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் கூறும்போது, ''செந்தில்முருகன் அ.தி.மு.க.,வில் இருப்பது உண்மை. ஆனால், பொறுப்பில் இருப்பது நினைவில்லை. கட்சி அறிவிப்புக்கு மாறாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியானால், அவர் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
08-Jan-2025