பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சிபுன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 60. இவரது மனைவி பரிமளம், 57. அதே பகுதியில் விவேக் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடை பின்புறம் வீடு உள்ளது. நேற்று மதியம் கடையில் பரிமளம் இருந்த நிலையில், பைக்கில் வந்த இருவரில் ஒருவர், கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, பரிமளாவின் கவனத்தை திசை திருப்பி, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார். பரிமளம் கூச்சலிடவே இரண்டு பேரும் பைக்கில் ஏறி தப்பினர். அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. புன்செய் புளியம்பட்டி போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.