உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிழக்கு தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுநிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் அனுமதி

கிழக்கு தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுநிபந்தனைகளுடன் தேர்தல் கமிஷன் அனுமதி

ஈரோடு, :அரசியல் கட்சியினர் புகைப்படம் இன்றி, தேர்தல் நடத்தை விதிப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ உருண்டை வெல்லம், ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வழங்கிய நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பால், பரிசு தொகுப்பு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.ரேஷன் கடைகளில், 'ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இயலவில்லை' என்று மட்டும் போர்டு வைத்தனர்.இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், மாநில அரசு மூலம் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றுள்ளது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடப்பதால், இத்தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலை ஆகியவை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க, இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி ஆணை, நிபந்தனைகளுடன் பெறப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது, அரசியல் கட்சியினர் ஈடுபாடு கூடாது. இத்திட்டம் தொடர்பாக, அரசியல் கட்சியினரின் புகைப்படம் இன்றி, விளம்பரம் இருத்தல் வேண்டும்.தேர்தல் நடத்தையின் அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று காலை முதல் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கடைகளிலும், பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி