உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழில் துறையை நசுக்கும் வரி பேட்டியா கூட்டத்தில் தீர்மானம்

தொழில் துறையை நசுக்கும் வரி பேட்டியா கூட்டத்தில் தீர்மானம்

தொழில் துறையை நசுக்கும் வரி பேட்டியா கூட்டத்தில் தீர்மானம்ஈரோடு, :ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (பேட்டியா) செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் பங்கேற்று, தொழில் வளர்ச்சி குறித்து பேசினார். கோவை, திருச்சியை விட ஈரோடு மாநகராட்சிக்கு அதிக வரி விதித்துள்ளனர். தொழில்துறையினரை நசுக்குவது போல உள்ளதால், இந்த வரிகளை குறைக்க வேண்டும்.மஞ்சளுக்கென மத்திய அரசு வாரியம் அமைத்தாலும், தலைமை அலுவலகத்தை ஈரோடு மாவட்டத்தில் அமைக்காதது வருத்தத்தை அளிக்கிறது. கிளை அலுவலகத்தை ஈரோட்டில் அமைத்து, ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கத்தை வாரியத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும்.சொத்து வரி, குப்பை வரி, ஜி.எஸ்.டி., என பல வரிகள் இருக்கும்போது, தொழில் வரியும் செலுத்த வணிகர்கள் சிரமப்படுதவால், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தொழில் வரியை முழுவதும் நீக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை