உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாஜி காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவி கொலை; கணவன் கைது

மாஜி காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவி கொலை; கணவன் கைது

மாஜி காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவி கொலை; கணவன் கைதுபவானி, :சித்தோடு அருகே, பிரிந்து சென்ற மனைவி, முன்னாள் காதலனுடன் குடும்பம் நடத்தியதால், கத்தியால் குத்தி கணவன் கொலை செய்தார். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள, வாய்க்கால்மேடு, செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் கோபால், 44; வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா, 38; சித்தோடு அருகே வசுவப்பட்டியில் ஒரு மிக்சர் கம்பெனியில் வேலை செய்தார். பத்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இரு மகன்கள் உள்ளனர். நடத்தை சந்தேகத்தால் ஒரு மாதமாக மனைவியை பிரிந்து, வேறு பகுதியில் தங்கி, கோபால் வேலைக்கு சென்று வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் வசுவப்பட்டி சென்ற கோபால், மிக்சர் கம்பெனியில் இருந்த மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். சத்தம் போட்டபடி சரிந்த மணிமேகலாவை, பிற தொழிலாளர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.இதுகுறித்து சித்தோடு போலீசார் கூறியதாவது: மணிமேகலாவுக்கும், அவருடன் படித்த கறிக்கடை தொழிலாளி மோகன்ராஜுக்கும், படிக்கும்போது காதல் இருந்துள்ளது. மீண்டும் இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மது போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் மோகன்ராஜுவுடன் மணிமேகலா ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதையறிந்த கோபால், செங்குந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு நேற்று சென்று, மகன்களை பார்த்து பேசியுள்ளார். பிறகு வசுவப்பட்டியில் மனைவி வேலை செய்யும் மிக்சர் கம்பெனிக்கு சென்றுள்ளார். அப்போது இருவரிடையே ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி கொன்றுள்ளார். இவ்வாறு கூறினர். கோபாலை போலீசார் கைது செய்தனர். மோகன்ராஜுவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை