பர்ஸில் கிடைத்த வெள்ளி, தங்க நகைகள்போலீஸ் மூலம் ஒப்படைத்த தொழிலாளி
பர்ஸில் கிடைத்த வெள்ளி, தங்க நகைகள்போலீஸ் மூலம் ஒப்படைத்த தொழிலாளிஈரோடு:-ஈரோட்டில், சாலை ஓரம் கிடந்த பர்ஸில் தவற விடப்பட்ட தங்க, வெள்ளி நகைகளை கண்டெடுத்த சுமை தொழிலாளி, போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார்.ஈரோடு, கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி மனைவி பிரபா, 29. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி செய்கிறார். நேற்று முன்தினம், கருங்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஸ்கூட்டரில் சென்றார். ஒரு சிறிய பர்ஸில் தங்கத்தால் ஆன 2 தோடு, மூக்குத்தி, வெள்ளி மோதிரம், கொலுசு, மெட்டி போன்றவை வைத்திருந்தார்.கருங்கல்பாளையம் சென்றபோது, பைக்கில் வைத்திருந்த பர்ஸ் சாலை ஓரம் கீழே விழுந்தது. இதை பிரபா கவனிக்கவில்லை. இந்த இடத்துக்கு. ஈரோடு மாவட்ட மத்திய சுமைப்பணியாளர் சங்கத்தின் சுமை தொழிலாளி வைராபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம், 55, என்பவர் தனது பைக்கை ஓரமாக நிறுத்தியபோது, இந்த பர் ைஸ பார்த்து எடுத்தார். அதில் நகைகள் இருந்தது பற்றி, நிர்வாகிகளிடம் தெரிவித்து கருங்கல்பாளையம் போலீசில் கூறினார்.நேற்று அந்த நகைகளை, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் முன்னிலையில் உரியவரிடம் செல்வம் ஒப்படைத்தார். செல்வத்தை அனைவரும் பாராட்டினர்.