உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சபரிமலை சென்று திரும்பியஐயப்ப பக்தர் விபத்தில் பலி

சபரிமலை சென்று திரும்பியஐயப்ப பக்தர் விபத்தில் பலி

புன்செய்புளியம்பட்டி, :கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த அசோகா, 40, ரகு, 38, ரங்கசாமி, 42, ஆகியோர் ஆம்னி காரில் சபரிமலைக்கு சென்றனர். தரிசனம் முடிந்து கர்நாடகாவுக்கு திரும்பினர். காரை அசோகா ஓட்டினார். சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய்புளியம்பட்டி அடுத்த புதுரோடு பகுதியில் நேற்று காலை கார் சென்றது. வளைவான பகுதியில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் சிக்கித்தவித்த மூவரையும், பிற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயமடைந்த அசோகா செல்லும் வழியிலேயே இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை