பைக் மீது கார் மோதிகோபியில் டெய்லர் பலி
பைக் மீது கார் மோதிகோபியில் டெய்லர் பலிகோபி,:கோபி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் டெய்லர் பலியானார்.கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 62, டெய்லர்; இவர் தனது யமாகா பைக்கில், குள்ளம்பாளையம் பிரிவை கடக்க, ஈரோடு பிரதான சாலையின் மத்தியில் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு நின்றிருந்தார். அப்போது கோபியை சேர்ந்த கணேஷ், 40, என்பவர் ஓட்டி வந்த டாடா இண்டிகா கார், சாலையின் மத்தியில் நின்றிருந்த, ரவியின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த ரவி சிகிச்சைக்காக, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பொன்மொழி, 57, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.