உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொது மயானத்தில் கல்லறை தோட்டம்மக்கள் எதிர்ப்பால் டவுன் பஞ்., தீர்மானம்

பொது மயானத்தில் கல்லறை தோட்டம்மக்கள் எதிர்ப்பால் டவுன் பஞ்., தீர்மானம்

'பொது மயானத்தில் கல்லறை தோட்டம்'மக்கள் எதிர்ப்பால் டவுன் பஞ்., தீர்மானம்பவானி:பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., உட்பட்ட சின்னியம்பாளையத்தில், டவுன் பஞ்.,க்கு சொந்தமான காலி இடத்தை, சுற்றுவட்டார பகுதி மக்கள் மயானமாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த மனு அடிப்படையில், அதே மயானத்தை கல்லறை தோட்டமாக பயன்படுத்த வருவாய் துறையினர் அறிவித்தனர். இதையறிந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பவானி தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம், ௨௮ம் தேதி மனு கொடுத்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் சித்ரா, இது சம்பந்தமாக டவுன் பஞ்.,ல் தீர்மானம் நிறைவேற்றி கொண்டு வருமாறு தெரிவித்தார்.இதன் அடிப்படையில் டவுன் பஞ்., தலைவர் உட்பட 15 கவுன்சிலர்கள் சார்பில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஜம்பை கிராமத்தில் உள்ள சின்னியம்பாளையம், சின்னியம்பாளையம் புதுார், செலம்பகவுண்டன்பாளையம் பகுதி மக்கள் மேற்காணும் மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் கிறிஸ்தவ மயானம் ஏற்படுத்த ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் டவுன் பஞ்., நிர்வாகமும் ஆட்சேபனை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை