உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரியில் கலக்கும் சாக்கடை நீர் நீரோட்டம் குறைந்ததால் துர்நாற்றம்

காவிரியில் கலக்கும் சாக்கடை நீர் நீரோட்டம் குறைந்ததால் துர்நாற்றம்

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தற்போது குடிநீ-ருக்காக மட்டுமே, 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஆற்றில் குறைந்த நீரோட்டமே உள்ள நிலையில், சாக்-கடை நீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக ஈரோட்டில் பி.பெ. அக்ரஹாரம் பகுதி, கருங்கல்-பாளையம் பகுதி, கோணவாய்க்கால் பகுதிகளில் நேரடியாக சாக்-கடை நீர் காவிரியில் கலக்கிறது. மாநகராட்சியால் மறு சுழற்சி செய்த பாதாள சாக்கடை நீர், வெண்டிபாளையம் மோகன் தோட்டம், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், பெரியார் நகர், சூரம்பட்டி பகுதிகளில் காவிரி ஆற்றில் கலக்கிறது. நீரோட்டம் குறையும்போது இந்த துர்நாற்றத்தை உணர முடிவதா-கவும், மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:காவிரி ஆற்றின் பல இடங்களில் நேரடியாகவே சாக்கடை நீர் கலக்கிறது. குடிநீருக்காக மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாறைகளுக்கு இடையே ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கி-றது. இந்நீரை தான் மக்கள், கால்நடைகள், விவசாயிகள் உள்-ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து சாக்கடை நீர் காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ