உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணிவரன் முறை செய்ய வேண்டும் அங்கன்வாடி ஊழியர் எதிர்பார்ப்பு

பணிவரன் முறை செய்ய வேண்டும் அங்கன்வாடி ஊழியர் எதிர்பார்ப்பு

பணிவரன் முறை செய்ய வேண்டும் அங்கன்வாடி ஊழியர் எதிர்பார்ப்புஈரோடு:-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்க கூட்டம், செயற்குழு கூட்டம் மாவட்ட நிர்வாகி ராதாமணி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்றார். மாநில தலைவி மணிமாலை கோரிக்கை குறித்து பேசினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அரசு அறிவித்தபடி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை, 3ம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளர்களை, நான்காம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு, 26,000 ரூபாய், உதவியாளர்களுக்கு, 22,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.மத்திய அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய் என்பதை வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின்படி, 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு பணி ஓய்வின்போது கிராஜூவிட்டி சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். இதன்படி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் என வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை