உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு குளம் அருகே குளம் அமைத்து தண்ணீர் திருட்டு

அரசு குளம் அருகே குளம் அமைத்து தண்ணீர் திருட்டு

அரசு குளம் அருகே 'குளம்' அமைத்து தண்ணீர் திருட்டுஈரோடு:ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் மனு வழங்கி கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட கருவில்பாறை வலசு பகுதியில் அரசால் துார்வாரப்பட்டு, பூங்காவுடன் கூடிய குளம் உள்ளது. இதன் அருகே தனி நபர்களுக்கு பட்டா நிலங்கள் உள்ளன. அங்கு செயற்கை குளம் அமைத்து, சாய, சலவை ஆலைகளுக்கு தண்ணீரை விற்கின்றனர். செயற்கை குளத்துக்கு அரசு குளத்தில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மண்ணும் வெட்டி எடுக்கப்படுகிறது.தவிர மணல் ரெடிமிக்ஸ் நிறுவனமும் செயல்படுத்தி, அதற்கான தண்ணீரும், அரசு குளத்தில் உறிஞ்சப்படுகிறது. இதுபற்றி அரசு, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பல ஆண்டாக தண்ணீரை பயன்படுத்தியதற்கும், கனிம வள கொள்ளையை கணக்கீடு செய்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ