உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கிழக்கில் 58 வேட்பாளர் 65 மனு தாக்கல் இறுதி நாளில் குவிந்த சுயேட்சைகள்

ஈரோடு கிழக்கில் 58 வேட்பாளர் 65 மனு தாக்கல் இறுதி நாளில் குவிந்த சுயேட்சைகள்

  • ஈரோடு கிழக்கில் 58 வேட்பாளர் 65 மனு தாக்கல் இறுதி நாளில் குவிந்த சுயேட்சைகள்
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த, 10ம் தேதி தொடங்கிய மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த, 10ல் மூன்று பேர், 13ம் தேதி ஆறு பேர் ஏழு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். இறுதி நாளான நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரிசையில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அவரது மனைவி அமுதா, மனுத்தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனுதாக்கல் செய்தார்.பின் பதிவு பெற்ற கட்சிகள் சார்பில், அகில இந்திய எம்.ஜி.ஆர்., ஜனநாயக கட்சி சார்பில் சேலம் ஆத்துார் முல்லைவாடி சி.ராஜமாணிக்கம், இந்திய கன சங்கம் சார்பில் ஈரோடு பெரியசேமூர் பாரதி நகர் தோல் வியாபாரி எஸ்.தர்மலிங்கம், சென்னை கொளத்துார், புத்தகரத்தை சேர்ந்த அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வா.சி.ரவி, கோவை, சோமனுாரை சேர்ந்த இந்திய கன சங்கம் கட்சி மாற்று வேட்பாளர் கே.நாகராஜன் மனுத்தாக்கல் செய்தனர்.சுயேட்சைகளாக ஈரோடு பெரியசேமூர் ஜீவா நகர் ஆட்டோ ஓட்டுனர் ஆர்.லோகநாதன், மொடக்குறிச்சி தாலுகா நஞ்சை ஊத்துக்குளி டெய்லர் கே.முருகன், நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் பெயிண்டர் எம்.கந்தசாமி, சென்னை கொரட்டூர் வெங்கட்ராமன் நகர் செல்லபாண்டியன், பெருந்துறை நிச்சாம்பாளையம் பிரப் நகர் விவசாய தொழிலாளி டீ.பிரபாகரன், ஈரோடு கே.என்.கே.சாலை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மனோஜ் பிரபாகர், ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.சாலை க.கலையரசன்.வேலுார் மாவட்டம் குடியாத்தம், நெல்லுார் பேட்டை பாவோடும்தோப்பை சேர்ந்த அனைத்து ஓய்வூதியதாரர்கள் நலக்கட்சி சார்பில் கே.முனியப்பன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரைபுதுார் அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு சார்பில் அக்னி ஆழ்வார், ஈரோடு, கொல்லம்பாளையம் காந்திஜி வீதி ரா.சாந்தகுமார், திருவாரூர் மாவட்டம் குடவாசல் மூலக்குடி ஆர்.திருமலை, ஈரோடு மாவட்டம் கோபி கோடீஸ்வரா நகர் அ.சங்கர்குமார், ஈரோடு, கந்தசாமிசெட்டி தோட்டம் என்.தனஞ்ஜெயன், ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, முருகேசன் காலனி சு.சவிக்தா, ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் சா.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு தேவா வீதி கராத்தே சிவா என்ற பரமசிவம்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சீ.முத்தையா, சென்னை கோடம்பாக்கம் பாண்டியன், பெங்களுரு கே.ஆர்.புரம் சி.பத்மாவதி, அந்தியூர் தாலுகா மூங்கில்பட்டி கீழ்வாணி எம்.ஆர்.செம்புட்டுவன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் எச்சனஹல்லி முனிஆறுமுகம், கோபி குள்ளம்பாளையம் எஸ்.மதுமதி, நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு மல்லசமுத்திரம் எஸ்.சவுந்தர்யா, பெருந்துறை திருவேங்கடபாளையம் எஸ்.செல்லகுமாரசாமி, ஈரோடு கோட்டை வி.கார்த்தி, நாமக்கல் மாவட்டம் பிள்ளைகளத்துார் மேட்டுப்பாளையம் ந.ராமசாமி, ஈரோடு வைராபாளையம் செ.பரமேஸ்வரன், பெருந்துறை கந்தம்பாளையம்புதுார் து.அமுதரசு, கோவை மருதமலை சாலை, மகாலட்சுமி நகர் சுப்பிரமணியன், ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலை மா.சாமிநாதன், ஈரோடு, கொல்லம்பாளையம் கே.வாசு.சென்னை கொளத்துார் ரவி, ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆர்.ரவிகுமார், ஈரோடு காந்திஜி சாலை லோகேஷ் சேகர், ஈரோடு 46புதுார் ஆர்.சத்யா, நாமக்கல் ஏமப்பள்ளி எஸ்.ரமேஷ்பாபு, திருச்சி ஏர்போர்ட் பகுதி வி.எஸ்.ஆனந்த், குடியாத்தம் பஞ்சாச்சரம் உட்பட, 49 வேட்பாளர்கள், 55 மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தத்தில், 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் தி.மு.க., சந்திரகுமார் நான்கு மனு; நா.த.க., சீதாலட்சுமி மூன்று மனு; சுயேட்சைகளான நுார்முகம்மது, அக்னி ஆழ்வார் தலா இரு மனுக்களை கூடுதலாக தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ