மாநில கராத்தே போட்டியில்காங்கேயம் மாணவன் முதலிடம்
மாநில கராத்தே போட்டியில்காங்கேயம் மாணவன் முதலிடம்காங்கேயம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் சக்திவேல் மகன் ஸ்ரீராம் ரத்னம், 19; சிறு வயதில் இருந்தே தந்தையுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். கோவையில் கல்லுாரியில் படிக்கும் ஸ்ரீராம்ரத்தினம், சென்னையில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, ௧,௦௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 84 கிலோ எடை பிரிவில் பங்கேற்றவர், 40 பேரை வீழ்த்தி மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.